குறுக்கே வந்த முதியவர்.! தடுப்பு சுவரை தாண்டி பாய்ந்த கார்.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும், முதியவரும் பரிதாப பலி.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஒரு கார் கொடைரோடு மேம்பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் திடீரென சைக்கிளில் குறுக்கே வந்த முதியவர் ஒருவர் மீது வேகமாக வந்த கார் மோதியது.
  • பின்னர் நிலை தடுமாறி கார் தடுப்பு சுவரை தாண்டி அடுத்த சாலையில் பாய்ந்து. அப்போது அங்கு வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், மற்றும் சைக்கிளில் வந்த முதியவரும் உயிரிழந்தனர்.

மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஒரு கார் கொடைரோடு மேம்பாலத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையில் திடீரென சைக்கிளில் குறுக்கே வந்த முதியவர் ஒருவர் மீது வேகமாக வந்த கார் மோதியது. பின்னர் நிலை தடுமாறிய கார் சாலையில் இருந்த தடுப்பு சுவரை தாண்டி பாய்ந்தது. அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து நெல்லை நோக்கி வந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளையப்பன், மைந்தன், ஜெயந்திலால்மணி, ஜெபக்கனி ஆகிய 4 பெரும் சம்பவ இடத்திலும், சைக்கிளில் குறுக்கே வந்த முதியவர் கிருஷ்ணன், திண்டுக்கல் மருத்துவமனையில் சிகிச்சையின்றி பரிதமாக உயிரிழந்தார்.

மேலும், மதுரையில் இருந்து சென்ற காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே மீட்பு பணியில் ஈடுபட்ட போது, மீட்பு வாகனத்திலிருந்த இரும்பு சங்கிலி அறுந்து காவலர் பெருமாள் தலையில் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் இச்சம்பவத்தை பற்றி கூறுகையில், பொதுவாக தேசிய நெடுஞ்சாலையை அணுகு சாலை வழியாகத்தான் கடக்கவேண்டும், ஆனால் இங்கு சாலை விதிகளை பொருட்படுத்தாமல் சென்று, சைக்கிள் ஓட்டி பலியானதுடன் மேலும் 4 உயிர்களும் அநியாயமாக பலியானதாக தெரிவித்தார். மேலும், அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டெஸ்ட் தொடரில் தமிழர்கள்.! யார் அந்த இருவர்?

டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…

3 hours ago

“படம் வந்ததே நிறைய பேருக்கு தெரில.. எங்க மேலதான் தப்பு”- விஜய் சேதுபதி வருத்தம்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…

3 hours ago

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னவெல்லாம் வலியுறுத்தினார்.?

டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…

4 hours ago

BSF வீரர்கள் சொல்ல சொல்ல கேட்கல.., எல்லை தாண்டிய பாக். நபர் சுட்டுக்கொலை.!

குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…

5 hours ago

டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்..! இந்திய அணி Squad இதுதான்!

டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…

7 hours ago

”ED அல்ல மோடிக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!

சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…

7 hours ago