அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகத்தை கடை கோடிக்கு தள்ளிய காகிதப் புலி – ஈபிஎஸ்

திமுக அரசு, கடந்த 27 மாத கால ஆட்சியில் தமிழகத்தை பல துறைகளில் பெரும் பின்னடைவில் நிறுத்தியுள்ளது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக மக்களிடம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, அவர்களின் மனதில் ஆசையைத் தூண்டி பின்புற வாசல் வழியாக ஆட்சியைப் பிடித்த மக்கள் விரோத விடியா திமுக அரசு, கடந்த 27 மாத கால ஆட்சியில் தமிழகத்தை பல துறைகளில் பெரும் பின்னடைவில் நிறுத்தியுள்ளது. சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதில் பின்னடைவு: கொலை, கொள்ளை, வழிப்பறி, முதியவர்களை குறிவைத்துத் தாக்குதல் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களும் அதிகரிப்பு
- போக்சோ குற்றங்கள் அதிகரித்து, பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலம் தமிழ் நாடு இல்லை என்ற அவப் பெயர்.
- காவல் நிலைய மரணங்களில் தென்னிந்தியாவிலேயே தமிழ் நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாக, மத்திய குற்ற ஆவணக் காப்பகம் நேற்று (2.8.2023) தெரிவித்துள்ளது.
- உடல் உறுப்பு தானம் செய்வதில் முதலிடத்தைத் தவறவிட்டது.
- 27 மாத ஆட்சியில், இதுவரை ஒரு புதிய பேருந்து கூட வாங்காமல், போக்குவரத்துக் கழகங்களை சீரழித்த அவலம்.
- அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கடும் விலை உயர்வு.
- நில மதிப்பு அதிகரிப்பு, பொது பதிவுகளுக்கான கட்டணங்கள் உயர்வு உட்பட அரசின் அனைத்துக் கட்டணங்களும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- அரசின் வரி வருவாய் பல மடங்கு அதிகரித்தும், நிதி நிர்வாக குளறுபடியால் இரண்டு ஆண்டுகளில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் புதிய கடன்.
- தாலிக்குத் தங்கம், அம்மா இருசக்கர வாகன மானியம், தாய் சேய் நலப் பெட்டகம் மற்றும் நிதியுதவி, மாணாக்கர்களுக்கு மடிக் கணினி என்று ஏழை, எளியவர்களுக்கு அம்மா அரசில் வழங்கப்பட்ட பல நிதியுதவித் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
- தேர்தல் சமயத்தில் அறிவித்த, நேரடியாக பணப் பயன் அளிக்கக்கூடிய வாக்குறுதிகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
- ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களின் தலையில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் பொருட்கள் விலை உயர்வு என்று பலவித சுமைகளை சுமத்தியது இந்த விடியா திமுக அரசு.
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கைவிரித்த விடியா திமுக அரசு இப்படி, இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழகம் புதைக்குழிக்குள் சென்றததை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தமிழகத்திற்கு அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு இரண்டுமுறை சுற்றுப் பயணம் செய்ததாக தம்பட்டம் அடிக்கும் முதலமைச்சர், அவர் குறிப்பிட்டதைப் போல் எந்தஒரு முதலீட்டையும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. இந்த ஆட்சியில் மக்கள், ஏமாறியதுதான் அவர்கள் கண்ட பலன்.
எனவே, 2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் இந்த விடியா திமுக அரசு நடத்த உள்ள உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டிலாவது, “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” ஆகியவற்றை விட்டுவிட்டு, தமிழக மக்களின் நலனுக்கான திட்டங்களையும், அதற்கான முதலீடுகளையும் இந்த விடியா திமுக அரசு ஈர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். வழக்கம்போல் இனிப்பு என்று கூறி தமிழக மக்களின் நாவில் விஷம் தடவும் வேலையை இந்த ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அன்னிய முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகத்தை கடை கோடிக்கு தள்ளிய காகிதப் புலி விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் !
– மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் அறிக்கை. pic.twitter.com/I6ZALQmLfO
— AIADMK (@AIADMKOfficial) August 3, 2023