எல்லா வளங்கள் இருந்தும் ஊழல் ஆட்சியால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது – அண்ணாமலை

என் மண், என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 7வது நாளில் புதுக்கோட்டை மாவட்டம் தனது பாதயாத்திரையை துவங்கினார். அப்போது,

BJP Annamalai India

என் மண், என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 7வது நாளில் புதுக்கோட்டை மாவட்டம் தனது பாதயாத்திரையை துவங்கினார். அப்போது, பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்த அண்ணாமலை, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இதன்பின், மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், எல்லா வளங்களும், இளைஞர் சக்தி இருந்தும் ஊழல் ஆட்சியால் தமிழகம் பின்னோக்கி செல்கிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல், வருகிற முதலீடுகளையும் திமுக அரசு தவறவிடுகிறது.தமிழகத்துடனான பாக்ஸ்கான் நிறுவன முதலீடு என்ன ஆனது என்பதற்கு விளக்கம் அளிக்கவில்லை.

மேலும், இந்த அரசால் நாட்டுக்கோ, தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. வெறும் சாராய விற்பனையில் சாதித்தால் போதும் என செயல்படும் திமுக அரசால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இதுதான் தமிழகத்தில் திமுக ஆட்சியின் முகவரியாக உள்ளது.

சிறையில் இருக்க வேண்டிய அமைச்சர் ரகுபதி, சிறைத்துறை அமைச்சராக இருப்பது வேதனையளிக்கிறது. தற்போது நான்  புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எந்த ஒரு நலத்திட்டத்தையும் மேற்கொள்ள வில்லை என்றும் விமர்சனம் செய்தார்.