ஈரோடு மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி இறந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை கோவில் திருவிழாவிற்காக தீர்த்தம் எடுக்கச் சென்ற கொண்டலாம்புதூர் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ் (வயது19), ஜெகதீஸ்வரன் (வயது 18) மற்றும் சௌத்ரி (வயது 14) ஆகிய மூவரும் எதிர்பாராதவிதமாக ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், தெரிவித்துக்கொள்வதோடு. அவர்களின் இரண்டு இலட்சம் ரூபாய் ஆறுதலையும் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/q27WgRIEOa
— TN DIPR (@TNDIPRNEWS) August 3, 2023
