மதுபோதையில் அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி-யை தாக்கிய நபர் கைது…!

மதுபோதையில் அடுத்தவர் வீட்டிற்குள் நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி-யை தாக்கிய நபர் கைது.
நீலகிரி அருகே அதிமுக முன்னாள் எம்.பி-யான கோபாலகிருஷ்ணன் அவர்கள் தீபாவளி தினத்தன்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் முத்தாலம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரது வீட்டுக்குள் திடீரென்று புகுந்துள்ளார்.
கோபமடைந்த அவர் கோபாலகிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பெண்கள் உள்ள இடத்தில் நிர்வாணமாக வந்தது குறித்து கோபால கிருஷ்ணனிடம் பேசினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபாலகிருஷ்ணனை கோபி தாக்கியுள்ளார்.
இதனையடுத்து அவர் குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருதரப்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், முன்னாள் எம்.பி-யை தாக்கியது தொடர்பாக போலீசார் கோபியை கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025