தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மேல் ஏறிய நபர்..! சமாதானப்படுத்தி தடுப்பூசி போட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள்..!
உத்திரபிரதேசத்தில் பாலியா பகுதியில் கொரோனா தடுப்பூசி போட மறுத்து, மரத்தின் மேல் ஏறிய நபரை சமாதானப்படுத்தி தடுப்பூசி போட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் பாலியா பகுதியில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கிராமங்களுக்கு சென்றுள்ளனர். அப்போது ஒருநபர் தடுப்பூசி போடா மறுத்து மரத்தின் மீது ஏறினார். அவரை சுகாதாரத்துறையினர் சமாதானப்படுத்தி, தடுப்பூசி குறித்து எடுத்துக் கூறி, தடுப்பூசி செலுத்தினர்.
அதேபோல் மற்றோரு நபர் சுகாதாரத்துறையினரிடம் தடுப்பூசி போடா மறுத்து, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கவும் செய்துள்ளார். அவருக்கும் தடுப்பூசி குறித்து எடுத்துரைத்து தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.