இன்னோவா காரை சாப்பாடு விற்பனை செய்யும் கடையாக மாற்றிய நபர்.!

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு காரணமாக வேளைக்கு செல்லாமல் வருமானம் இல்லாத சூழலில் குடும்பத்தை நடத்துவதற்காக ஒருவர் தனது இன்னோவா காரை சாப்பாடு விற்பனை செய்யும் கடையாக மாற்றியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடைமுறைகைளை மேற்கொண்டு வருகிறது அந்த வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டது.
இந்த நிலையில் இதன் காரணமாக வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் கடுமையான வருமான இழப்பை சந்திக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப் பட்டனர். இந்த நிலையில் மேலும் இ பாஸ் கிடைப்பதில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் தனது சொந்த மாவட்டங்களை விட்டு வெளியே வாடகை வாகனம் இயக்க அனுமதி கிடைப்பதில்லை எனவும் இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரியும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சோளிபாளையத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. ஊரடங்கு காரணமாக வேளைக்கு செல்லாமல் வருமானம் இல்லாத சூழலில் குடும்பத்தை நடத்துவதற்காக தனது இன்னோவா காரை சாப்பாடு விற்பனை செய்யும் கடையாக மாற்றியுள்ளார். மேலும் கடந்த 5 தினங்களாக உணவு விற்பனை செய்யும் கிருஷ்ணமூர்த்திக்கு இதன் மூலம் அன்றாட செலவுகள்ளுக்கு பணம் கிடைப்பதாகவும் கூறபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025