Edapadi palanisamy [Image source : PTI]
2021 தேர்தலில் சொத்துக்களை மறைத்த புகாருக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுகிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வென்றார். அவர் தனது வேட்புமனுவில் சொத்துக்களை மறைத்து வெளியிட்டுள்ளார் என மிலானி என்பவர் சேலத்தில் புகார் அளித்துள்ளார். அந்த வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது.
இந்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மிலானி என்பவர் சேலத்தை சேர்ந்தவரும் இல்லை. தன்னை எதிர்த்து போட்டியிட்டவரும் இல்லை. தான் தவறான தகவலை வேட்புமனுவில் கொடுக்கவும் இல்லை என கூறி சேலத்தில் பதியப்பட்ட வழக்கை விசாரணை செய்ய வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…