நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறியுடன் இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.
அனைத்து அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிபா சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது .அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது.
திருச்சி தனியார் மறுவாழ்வு மையத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது, காப்பக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனுமதியின்றி இயங்கும் காப்பகங்களை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025