#Breaking:ஒமைக்ரான் தொற்று:பள்ளிகளுக்கு போடப்பட்ட முக்கிய உத்தரவு!

The School Education Department has ordered the active implementation of Omicron infection control measures in Tamil Nadu schools.

ஒமைக்ரான் தொற்றானது பரவாமல் தடுக்க,பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை விதித்துள்ளது.

உலகின் சில நாடுகளில் ஒமைக்ரான் பரவிய நிலையில், வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த இரண்டு பேருக்கு இத்தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொடர்பான அரசின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும்,1 ஆம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும்,பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும்,பள்ளிகளில் இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக,ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.