அதிமுகவினர் போராட்டம் நடத்தியும் கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, இன்று அதிமுக ஒரு பக்கம் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. மறுபுறம் பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்படுமா..? அல்லது பாஜக ஒதுக்கப்படுமா..? என எதிர்க்கப்பட நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 சட்டமன்ற தொகுதிகளில் கோவை தெற்கு தொகுதி இடம்பெற்றுள்ளது. பொதுவாக தொகுதி பங்கீட்டில் வரும் பிரச்சனையை விட எந்தந்த தொகுதியில் யார் போட்டிடவுள்ளனர் என்பதில் தான் கூட்டணிகளுக்குள் பிரச்சனை ஏற்படும்.
அந்த வகையில், தொகுதி பட்டியல் வெளியிடுவதற்கு முன்னதாகவே கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த செய்தியை அறிந்த அதிமுகவினர் இன்று காலை கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்ககூடாது எனவும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனுக்கு ஒதுக்க கோரி கோவை அதிமுக அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேண்டும் வேண்டும் கோவை தெற்கு தொகுதி வேண்டும். பாஜகவுக்கு விட்டுத்தர முடியாது என முழக்கங்களை எழுப்பினர். அப்போது கோவை தெற்கு தொகுதியை பாஜவிற்கு கொடுத்தால், தேர்தலுக்கு வேலை செய்ய மாட்டோம். கட்சியை விட்டு விலகுவோம் என அதிமுகவினர் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று காலை அதிமுகவினர் போராட்டம் நடத்தியும் கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிமுகவினர் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…