ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த வீடியோ விவகாரம் – 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்த செய்யார் கல்லூரி முதல்வர்..!

ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்த வீடியோ – 9 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து செய்யார் அரசு கலைக்கல்லூரி முதல்வர் நடவடிக்கை
செய்யார் அரசு கலைக்கல்லூரி பயிலும் மாணவர்களில் ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களில் சில மாணவர்கள் பகிடிவதை மூலம் துன்புறுத்தியதாக முதலாம் ஆண்டு மாணவர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து அக்கல்லூரி முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
9 மாணவர்கள் சஸ்பெண்ட்
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களில் ஆதி திராவிடர் நல விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களில் சில மாணவர்கள் பகிடிவதை மூலம் துன்புறுத்தியதாக முதலாம் ஆண்டு மாணவர்கள் புகார் அளித்ததின் பேரில் சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வந்த வண்ணம் உள்ளன.
மாணவர்களின் புகாரின் அடிப்படையில் பகடிவதைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களின் விசாரணையின் அடிப்படையில் பகடிவதைச் செய்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை மேலும் விசாரணை செய்யும் பொருட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அவர்களின் தொலைபேசி செய்திக்கிணங்கவும், அறிவுறுத்தலுக்கிணங்கவும் கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தீர்மானத்தின்படியும் 9 மாணவர்களை ஒரு மாத காலம் தற்காலிக இடை நீக்கம் செய்து (Suspension) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அம்மாணவர்கள் இக்காலக்கட்டத்தில் கல்லூரி மற்றும் விடுதிக்கு வருதல் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.