புத்தகத்தை நீக்கியதில் எந்த  அதிர்ச்சியும்  இல்லை -அருந்ததி ராய் விளக்கம்

Default Image

“Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ள நிலையில் எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,   மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் ” Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து எழுத்தாளர் அருந்ததிராய் விளக்கம் அளித்துள்ளார்.அவர்  கூறுகையில் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின்  பாடத்திட்டத்தில் இருந்து ” Walking with the Comrades”  என்ற எனது புத்தகத்தை நீக்கியதில் எந்த  அதிர்ச்சியும்  இல்லை .பாடத் திட்டத்தில் எனது புத்தகம் கற்பிக்கப்பட்டதே இப்போதுதான் எனக்கு தெரியும்.எனது பணி எழுதுவதே. வாசகர்களைப் பொறுத்தே இலக்கியங்களின் முக்கியத்துவம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்