கு.க செல்வம் குறித்து பேச ஒன்றும் இல்லை.. திமுக பொருளாளர் துரைமுருகன்

நேற்று டெல்லியில் ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்து பேசினார். இதையடுத்து, கு.க. செல்வம் பாஜகவில் இணையுள்ளதாக தகவல் வெளியானது.
பின்னர், ஜே.பி. நட்டாவை சந்தித்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நான் பாஜகவில் இணையவில்லை என கூறினார்.டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த கு.க. செல்வத்தை பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்துக்கு நேராக சென்றார்.
அங்கு செய்தியாளர்களிடம் பேசிய கு.க. செல்வம், திமுகவில் வாரிசு அரசியல் குடும்ப அரசியலாக மாறி விட்டதாக என கூறினார். இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், கு.க செல்வம் குறித்து பேச ஒன்றும் இல்லை, அவரை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. மக்களை ஈர்க்கும் சக்தி கு.க.செல்வத்திற்கு இல்லை. நான் சட்டமன்றத்தில் பேசிய அன்றே நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்றைக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்காது.
எம்ஜிஆர், சம்பத், வைகோ போன்றவர்கள் பிரிந்து சென்றபோது, திமுக சிறிய இடர்பாடுகளை தான் சந்தித்தது.ஆனால், வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்களால் திமுகவுக்கு எந்த இடர்பாடும் இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்.