,

இது ஜனநாயக படுகொலை – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

By

கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட முன்வடிவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டுறவு சங்கங்களின் இயக்குநர்கள் குழுவின் பதவிக்காலத்தை 5 ஆண்டு காலத்திலிருந்து 3 ஆண்டுகளாக குறைத்து சட்டமுன்வடிவை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார்.

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்து கூட்டுறவு சங்கங்களை கலைப்பது குறித்த சட்டமசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. புதிய மசோதாவால் 2018ல் அதிமுக ஆட்சியில் தேர்வான கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிகிறது.

இந்த மசோதா அறிமுகம் செய்யும்போது, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சட்டப்படியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சட்டத்திற்கு விரோதமாக 3 ஆண்டுகள் பதவிகாலம் என்பதை ஏற்கமுடியாது. இது ஜனநாயக படுகொலை. 1983-ஆம் ஆண்டு கூட்டுறவு சங்களின் திருத்த சட்ட முன்வடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்பதே அரசின் எண்ணம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக்குகளை மூடியுள்ளனர். அம்மா உணவகம் முன்னோடி திட்டமாக உள்ளது, அதை மூடினால் என்ன என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது வேதனை அளிக்கிறது.

டாஸ்மாக் கடைகளை மூட எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது போராட்டம் நடத்தினார். தற்போது ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று உயரும்போது டாஸ்மாக் கடைகள் மூடாமல் இன்னும் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டார். மேலும், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் 15 பொருட்கள் தான் கிடைக்கிறது. 21 பொருட்கள் முழுமையாக தரமாக கொடுப்பதில்லை என வீடியோ காண்பித்து குற்றச்சாட்டனார்.

Dinasuvadu Media @2023