தூத்துக்குடி: புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். நேற்று தென் தமிழ்நாட்டின் முதல் மினி டைடல் பார்க் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட நிலையில், அதனை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இன்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு வருகை தந்து புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, மாணவிகளுக்கு பரிசுத்தொகையும் வழங்கினார். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தபோது, பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திமுக எம்பி கனிமொழி, மகளிர்உரிமைத்துறை அமைச்சசர் கீதா ஜீவன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
புதுமைப்பெண் விரிவாக்கம் திட்டம்
மாணவிகள் உயர்கல்வியில் சேர்வதற்காக அவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் தமிழக அரசு சார்பில் உருவாக்கம் செய்யப்பட்டது. அரசு பள்ளி மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்று வந்த நிலையில், தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளும் பயனடையும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்ற உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் வாயிலாக விரிவாக்கம் செய்யப்பட்டு மாதம் ரூ.1000 வழங்க படும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு பயிலும் 75,028 மாணவிகள் பயன்பெறுவர். இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், இனிமேல் உயர்கல்வி செல்லும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025