12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல் நாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வின் விடைத்தாள் நகல் வேண்டியவர்கள் நாளை விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தபின் மறுக்கூட்டல், மறுமதிப்பீட்டிற்கு நாளை dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
12-ஆம் வகுப்புத்தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவு வெளியான பின்னர், தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்கள் சரிதானா என்பதை சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அவர்களுடைய விருப்பத்தின் பேரில் விடைத்தாள்கள் scaned நகல்கள் பெறுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
விடைத்தாள்களின் scaned நகல் பெற்றவர்கள் விரும்பினால் விடைத்தாள்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதன் நகலை பெறுவதற்கு வருகின்ற ஆக.21-ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கும் பணி மறுமதிப்பீடு/மறுகூட்டல் பணிகளும் முடிவடைந்து மதிப்பெண் பட்டியல்களை பொறியியல் மற்றும் மருத்துவ சேர்க்கைக்கான கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பே வழங்கப்பட்டு வருகிறது.