புதுக்கோட்டையில் 6 பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்திய 60 வயது மூதாட்டி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளானர்.
புதுக்கோட்டை வடக்கு நாலாம் வீதியிலுள்ள வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக கணேஷ் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கணேஷ் நகரின் காவல் ஆய்வாளர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் பாலியல் தொழில் நடப்பதாக கூறப்பட்ட வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்பொழுது 6 பெண்கள் அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இவர்களை அந்த பகுதியை சேர்ந்த சாரதா என்ற 60 வயது மூதாட்டியும், அருண் மற்றும் வீரன் ஆகிய இரு ஆண்களும் சேர்ந்து தான் இந்த தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அந்த பெண்களை மீட்ட போலீசார், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மூதாட்டி உள்ளிட்ட மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் வீட்டை வாடகைக்குக் கொடுத்த வீட்டின் உரிமையாளரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 6 பெண்களுக்கும் அறிவுரை வழங்கிய போலீசார் அவர்களை பாதுகாப்பாக காப்பகத்தில் சேர்த்து உள்ளனர்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…