நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.ஆனால் சேந்தமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.இந்நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்த போது சரவணன் என்பவரின் நிலத்தில் இடி விழுந்ததாக தெரிகிறது.இதனால் அந்த நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் வயல் முழுவதும் தண்ணீர் நிரம்பி வீதிகளிலும் ,சாலைகளிலும் தண்ணீர் சென்றது.மேலும் அருகில் இருந்த தொடக்கப்பள்ளிக்கும் தண்ணீர் சென்றதால் நேற்று ஒருநாள் மட்டும் பள்ளிக்கு விடுமுறை அளித்தார் வட்டார கல்வி அலுவலர் செல்வி உத்தரவு விட்டார்.இடி விழுந்த நிலத்தில் நீர்வந்ததை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.
விவசாய நிலத்தில் விழுந்த இடி..! பாய்ந்தோடிய நீரால் பள்ளிக்கு விடுமுறை ..!
நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.ஆனால் சேந்தமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.இந்நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள