முற்றிலும் கணினி மயமாகும் தலைமைச்செயலகம் – நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...!

TN Headquarters completely computerized - Government of Tamil Nadu Government has released the funds set aside ...!

தலைமைச்செயலகத்தை முற்றிலும் கணினி மயமாக்க நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் முதல் முறையாக,கடந்த ஆக.13ம் தேதி காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இது முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் ஆகும்.காகிதப் பயன்பாட்டை குறைப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்து துறைகளையும் இ- அலுகலகம் ( e – Office ) ஆக மாற்றுவதற்கு ரூ.13 கோடி நிதியை ஒதுக்கி தற்போது தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு துறைகள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வாரியங்கள் / ஏஜென்சிகளில் இ-அலுவலகத்தை அமல்படுத்துவதற்கான நிர்வாக ஒப்புதலை வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.

அதன்படி,மின்-நிர்வாக ஆணையர் / தலைமை நிர்வாக அதிகாரி, டிஎன்இஜிஏ உள்ளிட்டவை ரூ .21,46,24,904 மதிப்பீட்டில் அனைத்து செயலகத் துறைகளிலும் இ-அலுவலகத்தை செயல்படுத்த அரசுக்கு விரிவான முன்மொழிவை அனுப்பியுள்ளது.

இதனையடுத்து,மின்-நிர்வாக ஆணையர் / தலைமை நிர்வாக அதிகாரி, TNEGA இன் முன்மொழிவை அரசு கவனமாக ஆராய்ந்த பிறகு,நிர்வாக ஒப்புதல் மற்றும்  ரூ. 13,44,27,90 நிதி ஒதுக்கி செயலகத்தின் அனைத்து துறைகளிலும் இ-அலுவலகத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது”, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node