TNPSC தேர்வு: கட்டாய தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியீடு!

Curriculum for Tamil Language Paper, Sample Question Paper Published by Tamil Nadu Civil Servants Selection Board.

தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாளை வெளியிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

TNPSC- தேர்வுகளில் தமிழ்மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டு, தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள்:

கடந்த 3-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் தமிழ் மொழித் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

புதிய அரசாணைப்படி டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் மற்றும் பாடத் திட்டம் எவ்வாறு அமையும் என்று அரசுத் தேர்வு ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்த நிலையில், தற்போது கட்டாய தமிழ் மொழித் தாளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.