அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் , துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியை அடைந்தது.மக்களவையில் 1 இடத்திலும் ,இடைத்தேர்தலில் 9 இடத்திலும் வெற்றிபெற்றது. அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக,தேமுதிக,புதிய தமிழகம் ,தமாக,புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் கூட்டணி கட்சிகள் தோல்வி அடைந்தது.அதிமுக தேனி மக்களவை தொகுதியில் மட்டும் வெற்றிபெற்றது.
தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.
இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ,புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தருமாறு பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…