பொதுவாக சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில்,சென்னையில் இன்று 23-வது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்த போதிலும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கும் மேலாக, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் எண்ணெய் நிறுவனங்கள் செய்யவில்லை.எனினும், பெட்ரோல்,டீசல் ரூ.100-ஐ விட்டு குறைக்கப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகளை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது.எனவே, பெட்ரோல் டீசல் விலை சதத்தை விட்டு பெருமளவில் குறைக்கப்பட வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் பெரும் விருப்பமாக உள்ளது.
இதனிடையே,தமிழகம் தெலுங்கானா,மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கவில்லை எனவும்,இதன்காரணமாகவே பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்துள்ளது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து,பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தொடர்பாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பிரதமர் மோடி கருத்து கூறியுள்ளார் எனவும்,
நடப்பு ஆண்டில் சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருந்த ஒரே காரணத்துக்காக,தேர்தலுக்கு முன்னர் கடந்த ஆண்டு பெட்ரோல்,டீசல் மீது விதிக்கப்படும் வரியை குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு.ஆனால்,தேர்தல் முடிந்த பின்னர்,மடமடவென்று பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியது மத்திய அரசுதான் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…