திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலின் ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் நாளை (09.08.2023) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்றான ஆடி கிருத்திகை முருகனின் சக்திகளைக் கொண்டாடும் விழாவாகும்.
இந்நிலையில், நாளைய விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 26ம் தேதியை பணி நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.