ஐ.நா சபையில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், நாளை நடைபெறும் ஐ.நா.சபை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்த செயலுக்கு இலங்கை கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், இலங்கைகக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இந்தியா எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காது என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், திமுக தலைவர் முக.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஐ.நா.சபையில் கொண்டுவரப்படும் தீர்மானித்தின் போது இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என அந்நாட்டு வெளியுறவு செயலாளர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா.சபையில் நாளை கொண்டுவரும் தீர்மானத்தில் அந்நாட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் போர்க்குற்ற விசாரணையை சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட பிரதமர் மோடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மனதில் கொண்டு ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக நாளை கொண்டுவரும் வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…