தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு 90 ஐ விட குறைவாக இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணத்தால் தமிழக முதல்வர் ஊரடங்கை அறிவித்திருந்தார். இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா பாதிப்பு இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவு 94 க்கு கீழ் இருந்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டிலேயே தனிமை படுத்தி கொள்ள வேண்டும். மேலும் ஆக்சிஜன் அளவு 90 முதல் 94 க்கு இடையில் இருப்பவர்கள் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் கொரோனா மையங்களில் சிகிச்சை பெறலாம். கொரோனா நோயாளிகளுக்கு 90க்கு கீழ் ஆக்சிஜன் அளவு இருப்பவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா நோயாளிகள் அனைவரும் குப்புறப்படுப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும். இதன்படி 3 வகைகளாக கொரோனா நோயாளிகளை பிரித்து சிகிச்சை அளிக்கவிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…