திருச்சி..கோவை மக்களே உங்களுக்கு தான்! நாளை இங்கெல்லாம் பவர்கட்!

திருச்சி நகரில் கே.கே.நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி உள்ளிட்ட இடங்களில் நாளை மின்தடை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : தமிழக மின்வாரியம் மேற்கொள்ளும் பராமரிப்பு பணிகளின் காரணமாக நாளை திருச்சி, கோவை மற்றும் உடுமலைபேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்படுகிறது. காலை முதல் மதியம் வரை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி நகரில் கே.கே.நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, எல்.ஐ.சி காலனி, சுந்தர் நகர், அய்யப்பா நகர், முல்லை நகர், மன்னார்புரம் பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் மின்தடை ஏற்படும். மேலும் அம்மன் நகர், வயர்லெஸ் சாலை, கலைஞர் நகர், இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், ராணி மெய்யம்மை நகர், மொராய்ஸ் சிட்டி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளிலும் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம், பள்ளபாளையம், நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும். அதேபோல் பீளமேடு, பாரதி காலனி, சௌரிபாளையம், ராமநாதபுரம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், புலியகுளம் மற்றும் திருச்சி சாலையின் சில பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

உடுமலைபேட்டை சுற்றுவட்டாரத்தில் முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், ராமபட்டினம், தேவம்பாடி, பொன்னாபுரம், சங்கம்பாளையம், காந்திநகர், ஜே.ஜே காலனி, வெங்கடேச காலனி உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

திருச்சி..கோவை மக்களே உங்களுக்கு தான்! நாளை இங்கெல்லாம் பவர்கட்!