வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் செல்வது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவிடம், திமுக நிர்வாகிகள் புகார்.
தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மே.2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் செல்வது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹுவிடம், திமுக நிர்வாகிகள் ஆ.ராசா, ஆர்.எஸ். பாரதி, பொன்முடி ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.
அதன் இந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது. எப்போதும் போல நடவடிக்கை எடுக்கிறேன் என்று சத்தியபிரதா சாஹு கூறியுள்ளார். 2 நாட்களில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால் அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றும், வாக்கு என்னும் மையங்களில் தேவையான அளவு கழிப்பறை இருக்கும் நிலையில், லாரிகளில் மொபைல் கழிப்பறைக்கு என்ன அவசியம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…