சென்னை விமான நிலையம் முதல் கத்திபாரா வழியாகவும், கத்திபாரா முதல் சின்னமலை வழியாகவும் உள்ள அண்ணா சாலை ,சர்தார் வல்லபாய் படேல் சாலை, ராஜீவ்காந்தி சாலை, ஈசிஆர் போன்ற சாலைகளில் கனரக சரக்கு வாகனங்கள், இலகு ரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை அக்டோபர் 11 (இன்று ) மற்றும் 12 வெள்ளி, சனி காலை 6 மணி முதல் 11 மணி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்ததாக அக்டோபர் 11 இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12 30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து சென்னைக்கு உள்ளே வரும் வாகனங்கள் அனைத்தும் ஓ சந்திப்பில் இருந்து வழி மாற்றப்பட்டு மதுரவாயல் பைபாஸ் வழியாக நகருக்குள் செல்ல திருப்பி விடப்படும். அதேபோல தென் சென்னை பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக அதே மதுரவாயல் பைபாஸிற்கு திருப்பி திருப்பி விடப்படும்.
அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை (இன்று ) பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் எல்லா வாகனங்களையும் 100 அடி சாலைக்கு திருப்பி விடப்படும்.
அக்டோபர் 11 வெள்ளிக்கிழமை (இன்று ) பிற்பகல் 3.30 மணி முதல் 4.30 மணி வரை மற்றும் அக்டோபர் 12 சனிக்கிழமை காலை 7 மணி முதல் 2 மணி வரையும், ராஜீவ் காந்தி சாலை வழியாக சென்னை நகருக்குள் வரும் வாகனங்கள் சோழிங்கநல்லூர் சந்திப்பின் மூலம் பெரும்பாக்கம் வழியாக சென்னை நகருக்குள் செல்ல திருப்பி விடப்படும். ஈசிஆர் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதி கிடையாது. என சென்னை போக்குவரத்து சார்பாக ஆறிவிக்கப்பட்டுள்ளதாம்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…