‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்ற பெயரில் பரவும் லிங்க் மூலம்,மொபைல் போனில் உள்ள தகவல்கள் ஹேக் செய்யப்படுவதாக சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக,பல்வேறு வாட்ஸ் அப் குரூப்களில் ‘பிங்க் வாட்ஸ்-அப்பினை’பயன்படுத்தலாம் என்று கூறி,லிங்க் ஒன்று பரவி வருகிறது.
மேலும்,இது வாட்ஸ்-அப் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வமான வெளியீடு என்றும்,வாட்ஸ்-அப்பின் புதிய அப்டேட் வெர்ஷன் என்றும் சொல்லப்படுகிறது.
இதனை நம்பி பிங்க் வாட்ஸ்-அப்பை பதிவிறக்கம் செய்தால்,ஒரு புதுவகையான வைரஸ் பரவி நமது மொபைல் போனில் இருக்கும் புகைப்படங்கள்,வீடியோக்கள் போன்ற முக்கியமான தகவல்கள் திருடப் படுவதாகவும்,மேலும்,எந்த காரணத்தினாலும் ‘பிங்க் வாட்ஸ்-அப்’ என்று கூறி வரும் லிங்குகளை தொட வேண்டாம் என்றும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில்,”பிங்க் வாட்ஸ்-அப் என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ வரும் லிங்குகளை க்ளிக் செய்யவோ,மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என்றும்,அவ்வாறு செய்தால் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்படும்” என்றும் கூறி எச்சரித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…