கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று வைஷாலி 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை கடந்தார்.
இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் 3 இந்திய வீராங்கனை ஆவார். வைஷாலி தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில்,இந்தியாவின் 3வது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி – சகோதரர் ஜோடியாக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். உங்கள் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…