அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த விசிக.! தலைவர்களின் ரியாக்சன் என்ன.?

விசிக சார்பில் நடைபெற உள்ள மதுவிலக்கு மாநாட்டிற்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் கருத்து கூறியுள்ளனர்.

Thirumavalavan - Jayakumar - Udhayanidhi stalin

சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,  ” வரும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று விடுதலை சிறுத்தைகள் மகளிர் அமைப்பு சார்பாக மதுஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.”என அறிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் கள்ளசாராயத்தால் தமிழகத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,589ஆக உள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினரை பார்க்க சென்ற போது அவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கூறினார்கள்.

அதனால் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2இல் மதுஒழிப்பு மாநாடு நடத்துகிறோம். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். விருப்பாட்டால் அதிமுகவும் இந்த மாநாட்டில் காலனித்துக்கொள்ளலாம். சாதி ,  மத ரீதியிலான கட்சிகளை தவிர மற்ற அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளலாம்” என்று திருமாவளவன் கூறியிருந்தார்.

கூடுதலாக, “வீட்டிற்கு ஒருவரை நோயாளி ஆக்கிவிட்டு நலத்திட்டங்கள் அறிவித்து என்ன பயன்?” என்றும் விமர்சனம் செய்திருந்தார் திருமாவளவன். திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தது. ஆளும் அரசுக்கு எதிராகவே பொதுவான விமர்சனத்தை முன்வைத்து என தமிழக அரசியல் வட்டாரத்தில் திருமாவின் கருத்துக்கள் பேசுபொருளாக மாறியுள்ள்ளது.

அமைச்சர் ஜெயக்குமார் :

திருமாவளவனின் பேச்சு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், “திருமாவளவன் கூறிய கருத்துக்களுக்கு கட்சித் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நான் எந்தவித கருத்தும் சொல்ல முடியாது. ஆனால், விசிக முன்னெடுத்துள்ளது நல்ல விஷயம். கூட்டணியில் இருந்துகொண்டே மது ஒழிப்பு மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

மது விலக்கு என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதி. இதற்காக கருப்பு சட்டையும், பதாகைகளும் ஏந்தி போராடியதை நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள். எனவே, திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதனை அவர்கள் செய்யவில்லை. தற்போது திருமாவளவன் சுட்டிக் காட்டுவது நல்ல விஷயமாக தான் நான் பார்க்கிறேன்.” என கூறிஉள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் :

திருமாவளவன் பேட்டி குறித்து திமுகவை சேர்ந்த மக்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ” விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்றால் அது நல்லது தான். அரசே கூட பல்வேறு வகைகளில் மது ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மற்றபடி, 2017ஆம் ஆண்டு முதல் விசிக உடனான கூட்டணி என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இதுவரை கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் இருக்கிறது. தமிழக அரசியலில் இந்த கூட்டணி இன்னும் பல ஆண்டுகள் மிக சிறப்பாக தொடரும்.” என்று அவர் கூறினார்.

அமைச்சர் உதயநிதி :

திருமாவளவன் பேட்டி குறித்து அமைச்சர் உதயநிதி கூறுகையில், ” மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பது அவர்கள் விருப்பம்” என தெரிவித்தார்.

மது ஒழிப்பு ,  மதுவுக்கு எதிரான போராட்டம் பொதுவானது எனக் கூறினாலும், தற்போது ஆளும் அரசுடன் கூட்டணியில் இருந்து கொண்டு, இப்படியான மாநாடு நடத்துவதற்கு ஆயத்தமாகி, அதில் பங்கேற்க எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு அழைப்பு விடுப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிமுக கூட்டணியில் விசிக பங்கெடுக்க இதுஒரு அச்சாரம் என்றும் அரசியல் வட்டாரத்தில் முணுமுணுக்கப்டுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
India whitewash Bangladesh
NZWvsSLW
Kavarapettai Train accident
Mohammad Shami
Chief pilot Ikrom Rifatli Fami Zainal - co-pilot Maitri Shithole
Rishabh Pant