அரசின் எதிர்ப்பை மீறி ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது!

தமிழக ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீலகிரி: உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்ன் ரவி தொடங்கி வைத்தார். தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து மற்றும் பாரதியார் பாடலுடன் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் முன்னதாக ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ஆளுநர் உள்ளிட்டோர் மவுன அஞ்சலி செலுத்தினர். துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுவதை ஒட்டி, உதகையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. துணைவேந்தர்கள் மாநாடு அரசுக்கே தெரிவிக்காமல் நடைபெறுவதாக அமைச்சர் ஏற்கனவே குற்றசாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.