தவெக 3ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு!

தவெக-வின் 3ஆம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை நாளை வெளியிடுகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய்.

vijay tvk

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி, தவெக தனது கட்சியை வலுப்படுத்தவும் , கட்சிப் பணிகளை விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளை 120 கட்சி மாவட்டங்களாகப் பிரித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்டச் செயலாளர், ஒரு இணைச் செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைச் செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் அடங்கிய நிர்வாகிகள் குழு அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனவரி 24-ம் தேதி கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 19 கட்சி மாவட்டங்களுக்கான பட்டியலை அக்கட்சி அறிவித்தது. இதை தொடர்ந்து, நேற்றைய தினம் (29ம் தேதி) சென்னை, மதுரை உட்பட மேலும் 19 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் இதர நிர்வாகிகளை நியமிப்பதாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அறிவித்தது.

இந்த நிலையில், தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான 3 ஆவது பட்டியலை நாளை (ஜன.31) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிடுகிறார். ஏற்கெனவே 2 கட்டங்களாக 38 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly