விழுப்புரம்: கள்ளச்சாராயம் – பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு.!!

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியத்தில் 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போதுவரை 11 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆபிரகாம் (48) என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால் தற்போது கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சிலர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு சிகிச்சையில் உள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.