இரண்டு நாட்கள் நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகு சொத்துக்களை முடக்கி நடவடிக்கை.
லாட்டரி அதிபர் மார்டினினுக்கு சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மே 11, 12-ம் தேதி லாட்டரி அதிபர் மார்டினினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியிருந்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்டினினுக்கு சொந்தமான ரூ.457 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
unknown node