கள்ளக்குறிச்சி விவகாரம்: குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்த வேண்டும் – விஷால் பதிவு.!

Kallakurichi - vishal

கள்ளக்குறிச்சி : விஷச்சாராய மரணம் அதிகரித்துக்கொண்டே செல்வது அதிர்ச்சியளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் இதுவரை 39 பேரின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் உறவுகளை இழந்த துக்கம் தாளாமல் கருணாபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்ததோடு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அந்த வகையில், நடிகர் விஷால் தனது எக்ஸ் தள பக்கத்தில், ” கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் விஷச்சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.

சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி,  போதைப் பொருட்களை முற்றிலும் ஒழித்து, மதுபானக் கடைகளை படிப்படியாகக் குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin-Ajith kumar
Ajithkumar Mystery Death
sivaganga lockup death
Madurai Branch of the High Court
mk stalin speech
elon musk vs donald trump