அதிமுக மற்றும் பாஜக மக்களவை தேர்தலில் இருந்து கூட்டணி வைத்து வருகிறது. அதிமுக -பாஜக கூட்டணி இடையே பீதியை ஏற்படுத்தும்,வகையில் அதிமுக அமைச்சர் பாஸ்கரன் பேசியுள்ளார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் விழா நடைபெற்றது.இந்த விழாவில் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். எங்களின் அமைச்சரவையிலே குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.
எனவே அமைச்சரின் இந்த கருத்து அதிமுக -பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அமைச்சர் பாஸ்கரன் பேசியது அவரின் சொந்தக்கருத்து.அதிமுகவின் கருத்து இல்லை என்று கூறினார்.இந்நிலையில் தனது கருத்தில் இருந்து அமைச்சர் பாஸ்கரன் பின்வாங்கியுள்ளார்.அதாவது தற்போது அவர் கூறுகையில், அதிமுக – பாஜக கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது என்று தனது கருத்தை மாற்றியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…