கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற ரூ.300 கோடி நிதி மோசடி வலக்கை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரிக்க கோரி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு விசாரித்தது.
அப்போது கூண்டுக்கிளியாக உள்ள சிபிஐ அமைப்பை தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக உருவாக்க தேவையான சட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், சிபிஐ-க்கு தேவையான நிதியை ஓராண்டிற்குள் பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்றும், அமெரிக்காவின் எப்பிஐ, இங்கிலாந்தின் ஸ்காட்லாந்த்து யார்டு போலீசை போல நவீன வசதிகள் சிபிஐ-க்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், 2020-ம் ஆண்டு டிச.31-ம் ஆண்டு வரை நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு, இது தொடர்பான அறிக்கையை சிபிஐ 6 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அல்லது சிபிஐ இயக்குனர் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…