“மதச்சார்பற்ற நெறிமுறைகளை நிலைநிறுத்துவதை உறுதி செய்வோம்” – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

Default Image

சென்னை:அரசியலமைப்பின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை நிலைநிறுத்துவதை இந்த குடியரசு தினத்தில் மீண்டும் உறுதி செய்வோம் என மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில்,ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து,பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

இந்நிலையில்,அரசியலமைப்பின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை நிலைநிறுத்துவதை இந்த குடியரசு தினத்தில் மீண்டும் உறுதி செய்வோம் என மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:

“இந்த குடியரசு தினத்தில் அரசியலமைப்பின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை நிலைநிறுத்துவதை மீண்டும் உறுதி செய்வோம்,மேலும் நமது தேசத்தின் மக்களை அனைத்து துறைகளிலும் உயர்த்துவதற்கான சிறந்த சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொள்வோம்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings
ramadoss