ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடருவோம்-கே.எஸ் அழகிரி

ரவீந்திரநாத் எம்.பி.யின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடருவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தோல்வி அடைந்தார்.இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், ரவீந்திரநாத் எம்.பி.யின் வெற்றிக்கு எதிராக வழக்கு தொடருவோம்.சோழர்கள் ஆட்சியில் சமூக நீதி காக்கப்படவில்லை என்பது உண்மை. சோழர்கள் ஆட்சியில் சமூக நீதி கிடையாது, சமூக அமைப்பு சரியாக செயல்படவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025