புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ன ? ஆய்வு செய்ய தமிழகம் வந்தது மத்திய குழு

What are the effects of the burevi storm? The Central Committee team came to airport in madurai to inspect

புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்திய  குழு தமிழகம் வந்துள்ளது.

தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் சேதங்கள் கடும் சேதமடைந்தன.இந்நிலையில் புரெவி புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக மத்திய குழு 3 நாட்கள் பயணமாக மதுரை விமான நிலையம் வந்துள்ளது .மத்திய இணைச் செயலாளர் அக்னிஹோத்ரி தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.புரெவிபுயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்த மத்திய குழு  அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கின்றனர். புதன்கிழமையுடன் ஆய்வை முடித்து டெல்லி திரும்புகின்றனர்.