விஜயகாந்தை பொதுக்குழுவில் பார்க்கும் போது நம்பிக்கை குறைந்தது -ரஜினிகாந்த்..!

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவரது மறைவு ரசிகர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக தேமுதிக அலுவலகத்தில் இருந்து இன்று காலை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் பட பிடிப்பிற்காக நாகர்கோவில் சென்றிருந்தார்.  தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது “விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு . அசாத்தியமான மன உறுதி கொண்ட ஒரு மனிதர் எப்படியும் உடல்நிலை தேறி வந்துவிடுவார் என எதிர்பார்த்தோம். சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழுவில் அவரை பார்க்கும் போது எனக்கு நம்பிக்கை கொஞ்சம் குறைந்தது.

அவர்கள் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை மக்கள் இழந்துவிட்டனர். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings