பன்னீர்செல்வம் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன் – புகழேந்தி

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்தவுடன் அதிமுகவில் இணைவேன் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி அமமுகவிற்கு எதிராக பேசி வந்த நிலையில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டது.அதாவது கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதற்கு முன்னதாக புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.சேலத்தில் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து புகழேந்தி கூறுகையில்,வெளிநாடு சென்றுள்ள துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வந்தவுடன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவேன் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025