தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்?! – அமைச்சர் கடம்பூர் ராஜு பதில்!

திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் – அமைச்சர் கடம்பூர் ராஜு.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிப்பிற்கு சில நாட்கள் முன்னரே தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், சினிமா ரசிகர்களும், திரைதுறையினரும் தியேட்டர் எப்போது திறக்கும் என ஆவலாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30 வரையில் நீட்டிக்கப்பட்டாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனால், திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான தளர்வுகள் எப்போது அறிவிக்கப்படும் என திரைத்துறையினர் காத்திருக்க,
இது குறித்து பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், திரையரங்குகளை திறப்பது குறித்து சரியான நேரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் எனவும், சின்னத்திரை படப்பிடிப்பிற்காக பெறப்படும் அனுமதி நடைமுறைகலைகளை அரசு தற்போது எளிமையாக்கியுள்ளது.’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025