தமிழகத்தின் இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசின் அனுமதி எப்போது?

Published by
Sharmi

மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் கண்டுபிடித்த இம்ப்ரோ சித்த மருந்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க காலம் தாழ்த்தி வருகிறது.

மதுரையை சேர்ந்த அரசு சித்த மருத்துவர் சுப்பிரமணியன். இவர் கொரோனா நோயின் தொடக்கமான முதல் அலையின் போது சித்த மருத்துவ பொடியான இம்ப்ரோ என்ற சித்த மருந்தை தயாரித்தார். இது குறித்து கூறுகையில், இந்த சித்த மருந்து பல மூலிகைகளின் கூட்டு சேர்க்கையாக தயாரிக்கப்பட்டது. இந்த மருத்துவ பொடியில் 66 வகையான மூலிகைகள் இருக்கிறது என்றும் இது 12 முதல் 14 வரை வைரஸ் எதிர்ப்பு தன்மை கொண்ட இந்த மருந்தில் தீநுண் கிருமிகளை கொல்லக்கூடிய சக்தி உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த இம்ப்ரோ சித்த மருந்தை தமிழக சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவக்குழு பரிசோதனை செய்துள்ளது. இதில் வைரஸ் கிருமியை அழிப்பதற்கான எதிர்ப்பு சக்தி இருக்க வாய்ப்புள்ளது என்று தமிழக சித்த மற்றும் ஆயுர்வேத குழு பரிந்துரை செய்துள்ளது. இதனை தொடர்ந்து மத்திய அரசிற்கு இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசிடம் இந்த இம்ப்ரோ சித்த மருந்தை வைராலஜி பரிசோதனைக்கு உட்படுத்துமாறு டாக்டர் சுப்பிரமணியன் 1 வருட காலமாக போராடி  வருகிறார்.

இது தொடர்பாக சட்ட ரீதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் இந்த இம்ப்ரோ மருந்தின் அங்கீகாரம் குறித்து மத்திய அரசு காலம் தாழ்த்திக்கொண்டு வருகிறது. சமீபத்தில் ஆந்திராவில் ஆனந்தையா என்பவர் தயாரிக்கும் ஆயுர்வேத லேகியத்திற்கு 2 நாட்களில் அனுமதி வழங்கிருக்கிறது மத்திய அரசின் ஆயுஷ் மருத்துவக்குழு ஆனால் தமிழத்தில் டாக்டர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த இம்ப்ரோ மருந்திற்கான அனுமதியை வழங்குவதை மத்திய அரசு செவிசாய்க்காமல் இருப்பது வேதனையை அளித்து வருகிறது.

இம்ப்ரோ மருந்தின் பரிசோதனைக்காக மத்திய அரசு கேட்ட அனைத்து ஆவணங்களையும் வழங்கியுள்ளதாகவும் இதற்கு தமிழக அரசு தொடர்ந்து துணை நிற்க வேண்டியும் டாக்டர் சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Recent Posts

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

46 seconds ago

டாஸ்மாக் ரெய்டுக்கு மத்தியில் பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.!

சென்னை : சென்னையில் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் விசாகன் வீடு உள்பட 5 இடங்களில் ED அதிகாரிகள் சோதனை…

10 minutes ago

ஐபிஎல் 2025 : பிளேஆஃப் சுற்றுக்கு செல்லுமா மும்பை இந்தியன்ஸ்?

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகிறது எந்த அணி கோப்பையை வெல்ல போகிறது…

38 minutes ago

ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்ஷி 10-ம் வகுப்பு தேர்வில் ஃபெயிலானாரா? வெளியான உண்மை.!

டெல்லி : பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல் விளையாடிய இளம் வீரர், 14 வயது பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி…

48 minutes ago

2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு…

1 hour ago

11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – அரியலூர் மாவட்டம் முதலிடம்.!

சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…

1 hour ago