நீ யாரா வேணும்னா இரு! எவனா வேணும்னா இரு! ஆனா என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களை சமூக விலகலை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் இடம்பெற்ற சமூக விலகல் குறித்த வசனத்தை பதிவிட்டுள்ளார். இந்த வசனத்தை பதிவிட்டு, சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அது என்ன வசனம் என்றால், வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் இடம் பெற்ற, ‘நீ யாரா வேணும்னா இரு! எவனா வேணும்னா இரு! ஆனா என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு!’ என்ற வசனம் தான்.
இந்த பதிவினை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், ‘இந்த வசனத்தை ஞாபகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி என்றும் இதற்குரிய பெருமை ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய பொன்ராம் அவர்களுக்குத்தான் போய் சேரும் என்றும் இரண்டே வரிகளில் அவர்தான் சமூக விலகலை மிக அழகாக விளக்கி இருப்பார்.’ என்றும் கூறியுள்ளார்.
Thank you brother @Siva_Kartikeyan “நீ யாரா வேணும்னா இரு
எவனா வேணும்னா இரு ; ஆனா
என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு “ #SocialDistancing ???? https://t.co/LUrC7149nn— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) April 2, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025