விநாயகர் சிலையை பதிவிட்டது ஏன்? – உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

எனது மகள் ரசித்த விநாயகர் சிலையை அவளின் விருப்பத்துக்காக ட்விட்டரில் பகிர்ந்தேன். நாட்டில் பல பிரச்சனை இருக்கையில் இதில் கயிறு திரிக்க பார்ப்பது சந்தர்ப்பவாதிகள் சதி வேலை – உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் விநாயகரின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ட்விட்டர் ட்ரண்டிங் வரை வந்துள்ளது. வழக்கமாக தி.மு.கவிலிருந்து விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், உதயநிதியின் ட்விட் அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அடிமை எடிபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசும் பொருளாக்காதவர்கள் தற்போது, பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்து அதை பரபரப்பாக விவாதிக்கிறார்கள்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதை பிடித்துக் கொண்டு வெவ்வேறு விதமாக கயிறு திரிப்பது பார்ப்பது சந்தர்ப்பவாதிகள் சதிவேலை. எனது மகள் ரசித்த விநாயகர் சிலையை அவளின் விருப்பத்துக்காக ட்விட்டரில் பகிர்ந்தேன். எனது அம்மா வாங்கிய சிலையுடன் என் மகள் விருப்பத்தின் பெயரில் புகைப்படம் எடுத்தேன். எனக்கோ என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது என் தாயாருக்கு நம்பிக்கை உண்டு என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

1 hour ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

2 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

6 hours ago