Pollachi Jayamaran says about Nirmala Sitharaman meeting [File Image]
பல்வேறு கருத்து மோதல்களை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலை அடுத்து இனி வரும் தேர்தல்களிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை எனவும் அதிமுக திட்டவட்டமான அறிவித்து இருந்தது.
இந்த சமயத்தில் தான், இன்று மத்திய அரசின் மெகா கடன் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள கோவை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை, அதிமுக எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே.செல்வராஜ் , வரதராஜ் ஆகியோர் சந்தித்தனர்.
கூட்டணி முறிவு என அறிவித்த பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை , அதிமுக எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. ஆனால் இந்த சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயமராமன், ‘ இது அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை.’ என திட்டமாவட்டமாக மறுத்தார்.
பாஜக – அதிமுக கூட்டணி முறிவு.! கோவையில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்.!
அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், மேட்டுப்பாளையம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி, தென்னிந்திய தென்னை விவாசாயிகள் சங்க தலைவர் சக்திவேல் ஆகியோர் இன்று மத்திய அமைச்சரை சந்தித்து ஏற்கனவே நாங்கள் வைத்த தென்னை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள மீண்டும் வலியுறுத்தினோம் என்று கூறினார்.
தென்னை நார் தொழிற்சாலைகள் நசிந்துபோய் உள்ளன. தேங்காய் விவசாயிகள் கஷ்டப்படுகிறார்கள். இது குறித்து மாநில அரசிடம் கடிதம் மூலம் கோரிக்கை வைத்தும், நேரடியாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை இது குறித்து தான் நாங்கள் பேசினோம். கூட்டணி பற்றி நாங்கள் பேசவில்லை.
பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் தான் மிக முக்கிய தொழில். அவர்களின் கோரிக்கைகளை தான் மீண்டும் நாங்கள் வலியுறுத்தினோம். கூட்டணி பற்றிய கருத்துக்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார்.
தென்னை விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். விவசாயத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களிடம் கோரிக்கை வைத்தோம். அனால் மாநில அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. தென்னை விவசாயிகள் நலன் குறித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள ஏற்கனவே டெல்லி சென்று கோரிக்கை வைத்தோம். தற்போது அது தொடர்பாகவே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தோம் என அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…