ரஜினியின் துக்ளக் விழாவில் பெரியார் குறித்த சர்ச்சை பேச்சால், பல இடங்களில் மற்றும் அரசியல் வாதிகளிடையே பெரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள். பின்னர் தந்தை பெரியார் கழகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் வீடு முற்றிகையிடப்படும் என தெரிவித்தனர். ரஜினி அண்மையில், நான் நடந்ததை தான் கூறினேன், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், மதுரையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 50 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தை ரஜினி பேச வேண்டிய அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.
மேலும், ரஜினி மீது தங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது என தெரிவித்த அவர், மாபெரும் தலைவரின் பெருமையை சீர்குலைத்து பேசுவது தவறானது என தெரிவித்தார். அண்ணா மற்றும் கருணாநிதியுடன் இருந்த துரைமுருகன் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவராக இருந்திருக்க வேண்டும் எனவும், ஸ்டாலின் தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். பின்னர் எப்போதும் பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழி நடத்துவதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…